தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg

அதிபர் செய்தி

அப்துல் பரீட் லரீப்

WEBCOMMS, LK DOMAIN RIGISTRY நிறுவனத்தின் அனுசரனையில் கல்வி அமைச்சின் பாடசாலை வலையமைப்பு கிளையுடன் இணைந்து ‘ இணைய உலகில் பிரவேசிப்போம்’ எனும் வேலைத்திட்டத்திற்காக நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கான இணைய உருவாக்கத்திற்கான மாணவர்கள் மற்றும் ஆசிர்யர்களை பயிற்றுவித்து சிறப்பாக செய்து முடிக்க பலவகைகளிலும் உதவிய அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு இப்பயிற்சியை முன்னின்று வழிநடாத்துகின்ற ‘Cyber Lowata Piyapath’ குழுவினருக்கும் இப்பயிற்சி நெறியின்இ வளவாளர் திரு. எம்.நேரு அவர்களுக்கும் எனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.அத்தோடு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும், வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இப்பயிற்சி நெறிக்கு அறிக்கைகள், மற்றும் பாடசாலையின் வரலாறு பற்றிய தகவல்களை தந்துதவிய முன்னால் அதிபர்கள் எஸ்.எம். அனிபா, ஏ.ஆர். சுல்தான் ஆகியோருக்கும் விஞ்ஞானப்பாட ஆசிரியர் எம். எஸ். நஜ்முதின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோன்று பாடசாலையின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியையான J. மஸாயினா உம்மா அவர்களுக்கும் அவருடன் இணைந்து செயற்பட்ட எமது மாணவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அப்துல் பரீட் லரீப்
அதிபர்
தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்.