எம்.டி. முகம்மட்காஸிம் என்பவர் ஆரம்பத்தில் பள்ளிவாயல் தலைவராக செயற்பட்டு பின்னர் இங்குள்ள பெண் மாணவிகள் கல்வி கற்பதற்காக தனி பெண்கள் பாடசாலை ஒன்று அவசியம் என கருதி தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் கானியை அன்பளிப்பாக வழங்கினார். இதனையடுத்து இப்பாடசாலையானது 1992 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கோட்டக்கல்வி அதிகாரி திரு எம் ரஷீத் அவர்களின் தலைமையில் தவிசாளர் அலி ஹாஜியார் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் முதலாவது அதிபராக திரு எஸ் எம் அனிபா அவர்கள் நியமிக்கப்பட்டார்