தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம்

வரலாறு

சிறுவர் தின வாழ்த்துக்கள் 2024

chill33.jpg
whatsapp-image-2024-10-25-at-09.12.50_2ea76284.jpg

 

பாடசாலை வரலாறு

 

பாடசாலை வரலாறு தி/கிண்/பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயம் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாம பிரதேசத்தின் முள்ளிப்பொத்தானை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலையானது 1992 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கோட்டக்கல்வி அதிகாரி திரு எம் ரஷீத் அவர்களின் தலைமையில் தவிசாளர் அலி ஹாஜியார் அவர்களின் உதவியுடன' ஆரம்பிக்கப்பட்டது.


பாடசாலையின் முதலாவது அதிபராக திரு எஸ் எம் அனிபா அவர்கள் நியமிக்கப்பட்டார்.
பாடசாலைக்கான காணியை முள்ளிப்பத்தானை பிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவர் அன்பளிப்பு செய்தார். இப்பாடசாலையில் தரம் 1 ற்கு மாணவர்கள் சேர்த்துக் ரைகொள்ளப்பட்டனர். தரம் இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆகிய வகுப்பு களுக்கான மாணவிகள் மகாவித்தியாலயத்திலிருந்து பிரித்தெடுத்துக்n கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயமானது ஒரு ஓலை கொட்டிலுடன் 02 ஆசிரியர்களுடனும், 54 மாணவவிகளுடனுமே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பாடசாலைக்கு தரம் ஒன்று தொடக்கம் ஒன்பது வகையான வகுப்புகளுக்கு மாத்திரமே அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு தரம் 10, 11 வகுப்புகளை நடத்துவதற்கான அனுமதி கிடைத்தது. அதன் அடிப்படையில் முதலாவது முறை கா. பொ. த (சா/த) பரீட்சைக்கு மாணவிகள் தோற்றி பெறுப்பேற்றில் கிண்ணியா வலயத்தில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டு சாதனை படைத்தனர்.


இப்பாடசாலையின் பௌதீக வள விருத்தி என நோக்கும் போது பாடசாலைக்கு முதலாவது கட்டிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டிடமானது பெற்றோர்களின் பங்களிப்புடன் அல்ஹஜ்ரா மகா வித்தியாலயத்தின் பழைய கட்டிடத்தின் பொருட்களைக் கொண்டே கட்டப்பட்டது.
2010 ஆம் ஆண்டு இப் பாடசாலை ஆனது 1C தர பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு கா. பொ. த (உ /த ) பரீட்சையில் முதல் தடவையில் தோற்றிய 12 மாணவிகளுள் நான்கு மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கும் 2 மாணவிகள் கல்வியியல் கல்லூரிக்கும் தெரிவு செய்யப்பட்டமை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப'பட வேண்டிய ஒன்றாகும். அதேபோன்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையிலும் தொடர்ச்சியாக 80% மேல் பெறும் ஓர் பாடசாலை இதுவாகும்.


31 வருடங்கள் பழமை வாய்ந்த இப்ப பாடசாலையானது தற்போது 576 மாணவிகளுடனும் 1 பிரதி அதிபர் 22 ஆசிரியர்கள், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ,ஆகியோரைக் கொண்டு இயங்கி வருகிறது. மிகக் குறைந்த பௌதிக வளங்களை கொண்டு பாடசாலையானது தேசிய மட்ட பரீட்சைகள், தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள், இணைப் பாடவிதான செயற்பாடுகள் என்பனவற்றில் மிகச் சிறந்த சாதனைகளை படைத்து கிண்ணியா வலயத்திற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறது.


பாத்திமா பாலிகா மகா வித'யாலயமானது தாம்பலகாமம் பிரதேசத்தில் இயங்கி வரும் ஒரெயொரு பெண்கள் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.